"ஹலோ தலைவரே. ராஜ்யசபா தேர்தலை தள்ளி வைக்க வாய்ப்பிருக்குதான்னு அ.தி.மு.க. ஆலோசிக்குது தெரியுமா?''”
"ஆமாம்பா... ராஜ்யசபா தேர்தலைத் தள்ளி வைக்கிறதுல அ.தி.மு.க. ஏன் அக்கறை காட்டுது.''”
"ஆமாங்க தலைவரே... தி.மு.க. வின் திருச்சி சிவா, அந்தியூர் செல்வ ராஜ், வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கனிமொழி, சோமு, அ.தி.மு.க.வின் தம்பிதுரை, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் ஆகிய 6 ராஜ்யசபா எம்.பி.க் களின் பதவி காலம் வருகிற ஏப்ரலில் முடி வடைகிறது. காலியாகும் அந்த 6 இடங்களுக்கும் மார்ச் அல்லது ஏப்ரல் முதல் வாரத் தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. ராஜ்ய சபா தேர் தலைப் பொறுத்தவரை தி.மு.க. தரப்பிலிருந்து 4 பேரையும், அ.தி.மு.க. சார்பில் 2 பேரையும் ராஜ்யசபா எம்.பி.க்களாகத் தேர்ந்தெடுக்க முடியும். தி.மு.க.வின் 4 இடங்களில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ ஆகிய இருவருக்கும் மீண்டும் வாய்ப்புத் தரப்படுமென்றும், கனிமொழி சோமு, அந்தியூர் செல்வராஜ் ஆகிய இருவருக்குப் பதிலாக, புதிய முகங்களுக்கு அதுவும் இளைஞரணியைச் சேர்ந்தவர்களுக்கு தரவேண்டும் என்கிற காய்நகர்த்தல் நடந்துகொண்டிருப்பதாக அறிவாலய வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. அதேபோல, அ.தி.மு.க.வில் மீண்டும் தனக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்துவருகிறாராம் தம்பிதுரை. ஆனால், ராஜ்யசபாவில் தம்பிதுரைக்கு பதிலாக சீனியர் ஒருவ ருக்கு வாய்ப்புத் தரவேண்டும். தம்பிதுரையை பயன்படுத்தித் தான் ஆகவேண்டுமானால், இந்தமுறை அவருக்கு சட்ட மன்றத் தேர்தலில் வாய்ப்புக் கொடுங்கள் என்று அ.தி.மு.க.வின் சீனியர் தலைவர்கள் பலரும், எடப்பாடியிடம் ஏற்கனவே அழுத்தம் கொடுத்துவருகின்றனர்.''
ராஜ்யசபா தேர்தல் நடக்கும் சமயத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் பணிகள் சீரியசாக நடந்துகொண்டிருக்கும். அதனைச் சுட்டிக் காட்டி, ராஜ்யசபா தேர்தலை சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு நடத்த வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தை அணுகலாமா? என்று அ.தி.மு.க. தரப்பில் ஆலோசிக்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ராஜ்யசபா தேர்தல் நடந்தால், தி.மு.க. தரப்பில் 4 பேர் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. அதேசமயம், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்தால், புதிதாக தி.மு.க.வில் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஜெயிக்கிறார்களோ அந்த எண்ணிக்கை யின்படிதான் ராஜ்யசபா எம்.பி.க்கள் தி.மு.க.வுக்கு கிடைக்கும். ஒருவேளை தேர்தல் முடிவுகளில் தி.மு.க.வுக்கு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் எம்.பி.க்களின் எண்ணிக்கையும் குறையும் என்று திட்டமிட்டு ஆலோசித்துள்ளதாம் அ.தி.மு.க. இத னால், ராஜ்யசபா தேர்தலை தள்ளி வைக்க முடியுமா? என்று நாடாளுமன்ற சட்ட விதிகளை அக்கட்சியின் வழக்கறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.''”
"காவல்துறை பதவிகளில் உரிய பிரதிநிதித் துவம் இல்லைனு பெண் அதிகாரிகள் அதிருப்தியா இருக்காங்களாமே,…என்ன விவரம்?''”
"சென்னைக்கு அருகேயுள்ள தாம்பரம், ஆவடி காவல்துறை ஆணையர் சரகங்களில் 50-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் இருக் கின்றன. இதில் தாம்பரம் சரகத்திலுள்ள காவல் நிலையங்களில், ஒரே ஒரு ஸ்டேஷனில் மட்டும் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பெண் இன்ஸ்பெக்டர் இருந்துவருகிறார். ஆவடி சரகத்தில் அதுவும் இல்லை. 50-க்கும் மேற்பட்ட ஸ்டேஷன்களில் கணிசமான எண்ணிக்கையில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பெண் இன்ஸ்பெக்டர்கள் இருக்கவேண் டும். ஆனால், அப்படி இல்லாதது பெண் அதிகாரி களிடம் அதிருப்தியை உருவாக்கிவருகிறது. இது குறித்து மேலிடத்தின் கவனத்துக்கு சிலர் கொண்டு சென்றபோது, பெண்களால் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியாது என்று சொல்லப்படுகிறதாம். பெண்களின் உரிமைகளை உயர்த்திப் பிடிக்கும் தி.மு.க. ஆட்சியில், காவல்துறை உயரதிகாரிகள், பெண் இன்ஸ்பெக்டர்களின் ஆதங்கத்தை புறக்கணிக்கக்கூடாது; அதுவும் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இவர்களின் ஆதங்கம் அதிருப்தி யாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற குரல்கள் தாம்பரம், ஆவடி காவல்துறை சரகங்களில் அதிகமாகக் கேட்கிறது.''”
"விஜய் இல்லாமலே த.வெ.க. மா.செ.க்கள் கூட்டம் நடந்ததாமே?''”
“"த.வெ.க. கட்சியின் மா.செ.க்கள் கூட்டம் கடந்த 11-ஆம் தேதி சென்னை பனையூரில் நடந்தது. கட்சித் தலைவர் விஜய் இல்லாமல் நடந்த இந்தக் கூட்டத்தில் கட்சியின் முதல்நிலை மாநில நிர்வாகி கள் உட்பட மா.செ.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர். த.வெ.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, இதுபோன்ற கூட்டங்களில் பேசமாட்டார். முதன்முறையாக பவர்பாய்ண்ட் பிரசண்டேசன் மூலம் பல்வேறு தகவல்களைக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். குறிப்பாக, த.வெ.க.விற்கான மக்கள் செல்வாக்கு குறித்து எடுக்கப்பட்ட சர்வேக்களை புள்ளி விவரங் களோடு எடுத்துச்சொன்னாராம். 6 மாதங்களுக்கு முன்பு நமக்கிருந்த 28% ஆதரவு தற்போது 31% ஆக அதிகரித்திருக்கிறது. இப்போது தேர்தல் நடந்தாலும் இந்த 31% ஆதரவு நமக்கு கிடைத்தே தீரும். தி.மு.க. வுக்கும் நமக்கும் 2, 3 சதவீதம்தான் வித்தி யாசம். அதனால் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக் கும்தான் போட்டி என்று நம் தலைவர் (விஜய்) தொடர்ச்சியாக சொல்லிவருகிறார் என்று மா.செ.க்களுக்கு புரியும்படி விளக்கி யிருக்கிறார் ஜான் ஆரோக்கியசாமி. மேலும் சிறுபான்மையினர் வாக்குகளில், குறிப்பாக கிறிஸ்தவர்களில் 70 சதவீதமும், முஸ்லீம்களில் 35 சதவீதமும் தலைவர் விஜய்யை ஆதரிக் கிறார்கள். காங்கிரஸ் நம் பக்கம் வந்துவிட் டால் சிறுபான்மையினரின் ஆதரவை முழுமையாக நாம் பெற்றுவிடமுடியும். காங்கிரஸ், நம் பக்கம் (த.வெ.க) வருவது விரைவில் உறுதியாகிவிடும். அதனால், நீங்கள் இன்னும் கடுமையாக உழைத்தால், தலைவரை (விஜய்) சி.எம். நாற்காலியில் பார்க்கமுடியும்’என்று விவரித்திருக்கிறார். ஜான் ஆரோக்கியசாமி பேசிய தகவல்களைத் தெரிந்துகொண்டு மகிழ்ந்திருக்கிறாராம் விஜய். ஆனால், செங்கோட்டையன் போன்றவர்கள் இந்த சர்வே ரிசல்ட்டினை ஏற்க மறுக்கிறார் கள். ஏனெனில், கிரவுண்ட் ரியாலிட்டி வேறுவிதமாக இருக்கிறது. அதனை உணர்ந்து தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தவேண் டும் என்கிறார்களாம் அவர்கள்.''”
"தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாமே?''”
“"ஆமாங்க தலைவரே... தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் பலியாகினர். இந்த கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கரூரிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் முகாம் அலுவலகம் அமைத்துள்ள சி.பி.ஐ., கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் விசாரணை நடத்திவருகிறது. போலீசார், பிரேதப் பரிசோதனை மேற் கொண்ட மருத்துவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உரிமையாளர்கள், காயமடைந் தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில் விஜய்யிடம் விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கை களை சி.பி.ஐ. அதிகாரிகள் எடுத்து வருவதாக வும், பிற த.வெ.க. நிர்வாகிகளைப்போல விஜய்யை கரூர் அழைத்து விசாரிப்பதில் பாதுகாப்பு பிரச்சனை இருப்பதால், விஜய்யிடம் சென்னையிலேயே விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/15/wrang-2025-12-15-15-55-56.jpg)
"ஓ.பி.எஸ்.ஸுக்கும், இ.பி.எஸ்.ஸுக்கும் மீண்டும் உரசல் தொடங்கியிருக்கிறதா பேச்சுவருதே என்ன விவரம்?''”
"ஓ.பி.எஸ். எப்போதும் டபுள் கேம் ஆடுவார். அவர் எடப்பாடியை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அந்தப் பொறுப்பையும் கட்சியையும் தன் வசம் ஒப்படைக்குமாறு பா.ஜ.க.விடம் கோரிக்கை வைத்திருக்கிறார். அதை நிராகரித்த பா.ஜ.க., அ.தி.மு.க.வில் இணையும்படி ஆலோசனை தெரிவித்தது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்த நிலையில், அவருக்கு அ.தி.மு.க.வின் அவைத் தலைவர் பதவி கொடுப்பதாக இருந்தது. அதற்காக தமிழ்மகன் உசேனை, பொதுக்குழுவில் சும்மா அமர வைத்துவிட்டு கே.பி.முனுசாமியை அவைத்தலைவராகக் கொண்டுவந்தார்கள். பொன்னையனை அவைத்தலைவராகப் போட்டால், அவர் அந்தப் பதவியை இறுகப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவார். அவரை எளிதில் கிளப்ப முடியாது என யோசித்தார் எடப்பாடி. இப்போது ஓ.பி.எஸ்.ஸுக்கு அவைத் தலைவர் பதவியைத் தருவதிலும் சிக்கல் வந்திருக்குதாம்.''”
"த.வெ.க. பக்கம் தே.மு.தி.க.வோட பார்வை திரும்பியிருக்குதாமே,…உண்மையா?''”
"அ.தி.மு.க., தி.மு.க. இரு பக்கமும் பேசி வருகிறது தே.மு.தி.க. வெறும் 0.5 சதவிகிதம் வாக்குகளையே தே.மு.தி.க. வைத்திருப்பதாக இரு கட்சிகளும் அபிப்பிராயப்படுகின்றன. மேலும் தே.மு.தி.க. எந்தப் பக்கம் வந்தாலும் அது ஒரு சுமையாகத்தானிருக்கும் என்பதால் தி.மு.க., அதி.மு.க. இரு கட்சிகளும் தே.மு.தி.க.வை கூட்டணியில் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றன. இந்நிலையில் தே.மு.தி.க.வின் பார்வை த.வெ.க. பக்கம் திரும்பியுள்ளதாம்.''”
"மத்திய அரசுகிட்ட உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்ல, த.வெ.க. பத்தின ஷாக் ரிப்போர்ட் இருக்குதாமே?''”
"உங்க காதுக்கும் விவரம் எட்டிடுச்சா தலைவரே, மத்திய உளவுத்துறை மேற்கொண்ட கணக்கீட்டின்படி, த.வெ.க.வுக்கு பெரிய தாக்கம் எதுவும் இருக்காதென தெரியவந்திருக்கிறதாம். விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டத்துக்கும் பெரிய முக்கியத்துவம் கிடைக்காதுன்னு சமீபத்திய சர்வே தகவல்களை மத்திய அரசுக்கு ரிப்போர்ட் சமர்ப்பித்திருக்கிறதாம் மத்திய உளவுத்துறை.''”
"தமிழக அமைச்சர் ஒருத்தர் தன் வேலைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கலைன்னு மனவருத்தத்துல இருக்கிறதா தகவல் வருதே?''”
"நிஜம்தான் தலைவரே! பெரும்பிடுகு முத்தரையருக்கு தபால் தலை வெளியிடுவதில் முக்கிய வேலைகள் செய்தவர் தமிழக அமைச்சர் மெய்யநாதன். அவர்தான் இதற்கான பூர்வாங்கப் பணிகளை எடுத்துப்போட்டு செய்து முக்கிய பங்காற்றினார். ஆனால், அந்த அமைச்சரின் செயல்பாடுகளை, ஒன்றிய அமைச்சர் முருகன் கையிலெடுத்து டெல்லியில் ஸ்டாம்ப் வெளியிடும் விழாவில் ஸ்கோர் செய்திருக்கிறார். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பெரும்பிடுகு முத்தரையருக்கு ஒரு தமிழர் கையால் தபால்தலை வெளியிடவேண்டும் என நாங்கள் வேலை செய்தோம் எனப் பேசியிருக்கிறார். நம்மோட பணியோட விளைச்சலை பா.ஜ.க. அறுவடை செய்துவிட்ட தேன்னு அமைச்சருக்குக் கொஞ்சம் வருத்தமாம்.''”
"அ.தி.மு.க. மேல்மட்டம் அதிர்ச்சியில இருக்கிறதா தகவல் வருதே?''”
"ஆமாங்க தலைவரே... இண்டியா கூட்டணியில் இடம்பெற்றதால, தேர்தலுக்கு நெருக்கத்தில் தி.மு.க.வினரை சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை போன்றவை நெருக்கடிக்குள்ளாக்கும். நாம ஸ்கோர் செய்யலாம்னு இருந்தாங்க. அதேபோல அமித்ஷாவும் தி.மு.க.வுக்கு எதிரா கோப்புகளை தயார்செய்து வைத்திருக்கிறார். அதேசயம் தொகுதி விவகாரத்தில் கெடுபிடி செய்தால் வழிக்குக் கொண்டுவர அ.தி.மு.க.வினர் மீதும் அமித்ஷாவிடம் 27 பைல்கள் ஆதாரப்பூர்வமாக கையிலிருக்கிறதாம். அதில் எடப்பாடியின் முக்கிய உறவினர்களும் அடக்கமாம் என்ற தகவல் தெரிந்து அ.தி.மு.க.வில் உற்சாகம் மிஸ்ஸிங்காம்.''”
"சரி, நானும் ஷாக்கிங்கான ஒரு விஷயம் சொல்றேன். பாளையிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியொன்றின் மாணவிகள் மது அருந்துகிற வீடியோ காட்சிகள் வெளியேறி வைரலாகியிருக்கிறது. பள்ளியின் விடுதியில் தங்கிப் படிக்கிற அந்த ஆறு மாணவிகளும் ஒன்பதாவது வகுப்பு மாணவிகளாம். இன்ஸ்டா, ரீல்ஸ் மோகத்திற்கு ஆட்பட்டு அப்படிச் செய்ததாக தகவல் வருகிறது. இந்த விவகாரம் மாவட்ட முதன்மைக் கல்வித்துறை வரை போக, அதிகாரியும் சம்பந்தப்பட்ட மாணவிகளை விசாரித்து விட்டு, அவர்களின் எதிர்காலம் வீணாகிவிடக் கூடாதென நடவடிக்கை எடுக்காமல் விட்டிருக்கிறார். ஆனால் சம்பவம் நடந்து 15 நாட்களுக்குப் பிறகு வீடியோ வெளியேறி சர்ச்சையைக் கிளப்பி யிருக்கிறது. வீடியோ வெளியானதில் பள்ளி தொடர் பான ஒருவருக் கும் தொடர் பிருப்பதாகவும், அவர்களுக்கு மது வாங்கிக் கொடுத்தவர் யார் என்பது பற்றிய விசா ரணையும் தற்போது வேகமெடுத் திருக்கிறது.''”’
______________
இறுதிச் சுற்று!
* சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் வேளையில், 2026, ஜனவரி மாதத்தில் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரவிருக்கிறாராம். பொங்கலை முன்னிட்டு இங்குவந்து, விவசாயிகளுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
* தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக செல்வப்பெருந்தகை உட்பட 21 தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன், டிசம்பர் 15, திங்களன்று ராகுல்காந்தி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
* அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் மீதான குண்டர் சட்டம் ரத்து. உயர்நீதிமன்றம் நடவடிக்கை.
* 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழக தேர்தல் பொறுப் பாளர்களாக பியூஷ் கோயல், முரளிதர் முகோல், அர்ஜூன்ராம் மேக்வால் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது பா.ஜ.க. தேசியத் தலைமை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/15/rang-2025-12-15-15-55-22.jpg)